;
Athirady Tamil News

சொத்துப் பட்டியல் வெளியிட்ட ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்!!

0

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் முதல்-மந்திரியும், மந்திரிகளும் தங்களது சொத்துப்பட்டியலை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு ரூ.65 கோடியே 40 லட்சம் சொத்துக்கள் உள்ளன. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரம் ஆகும். அவருக்கு கடன்கள் ஏதும் இல்லை. 2020-21 நிதி ஆண்டில் அவரது சொத்துகள் மதிப்பு ரூ.64 கோடியே 97 லட்சம் ஆகும். சொத்துகள் விவரம் வருமாறு:- * முதல்-மந்திரி அலுவலக இணையதளத்தின்படி, முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் அசையும் சொத்துகள் மதிப்பு 2021-22 ஆண்டில் அதிகரித்துள்ளது. அசையாச்சொத்துகள் மதிப்பில் மாற்றம் இல்லை.

* அசையும் சொத்துகள் மதிப்பு ரூ.12 கோடியே 52 லட்சம் ஆகும். இதில் டெல்லி, புவனேசுவரம், ஹிஞ்சிலிகட். பர்கார் ஆகிய இடங்களில் உள்ள வங்கிக்கணக்கு இருப்புகள், நகைகள், கார் அடங்கும். * அசையாச்சொத்துகளில் புவனேசுவரம் விமான நிலையம் அருகே உள்ள அவரது நவீன் நிவாஸ் பங்களாவின் மதிப்பு ரூ.9 கோடியே 52 லட்சத்து 46 ஆயிரத்து 190 ஆகும். டெல்லியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள ரூ.43 கோடியே 36 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான சொத்தில் பாதி, நவீன் பட்நாயக்கிற்கு இருக்கிறது. * ரூ.1 கோடி அளவுக்கு வங்கியில் டெபாசிட்டுகள் உள்ளன. ரூ.9 கோடி மதிப்பில் ரிசர்வ் வங்கி பத்திரங்கள் வைத்துள்ளார். அஞ்சலக சேமிப்பு ரூ.1½ கோடி உள்ளது. டெல்லி ஜன்பத்தில் உள்ள வங்கியில் ரூ.70 லட்சம், புவனேசுவரத்தில் உள்ள பாரத ஸ் டேட் வங்கியில் ரூ.21 லட்சம் சேமிப்பு உள்ளது. * ரூ.3½ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் காரும் வைத்துள்ளார்.

* ஒடிசாவில் 5 முறை முதல்-மந்திரி பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக்கின் அசையா சொத்துகள் மதிப்பு ரூ.52 கோடியே 88 லட்சம் ஆகும். இவை அவரது பெற்றோர் பிஜூ பட்நாயக், கியான் பட்நாயக் வழி வந்தவை ஆகும். நவீன் பட்நாயக் மந்திரிசபையில் மந்திரிகள் அசோக் சந்திர பாண்டா, பிரித்தி ரஞ்சன் கடாய், ரானேந்திர பிரதாப் ஸ்வைன், பிரமிளா மாலிக், நிரஞ்சன் பூஜாரி, உஷா தேவி, அடானு சப்யசாகி நாயக், ராஜேந்திர தோயில்கியா, டுகானி சாகு, பிரதீப் குமார் அமத், பி.கே. தேப், பசந்தி ஹேம்ப்ராம், ரோகித் பூஜாரி, அஷ்விணி பத்ரா ஆகிய 14 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள். ஒடிசாவின் உருக்கு, சுரங்கத்துறை மந்திரி பிரபுல்லா மாலிக்கிற்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவர்தான் வசதி குறைந்த மந்திரி ஆவார். இவர்கள் அத்தனை பேரின் சொத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.