;
Athirady Tamil News

வேற லெவல் டிசைன் – புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!!!

0

ஹூண்டாய் நிறுவனம் தனது i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிரீமியம் ஹேச்பேக் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் மேம்பட்ட வெளிப்புற டிசைன், புதிய அம்சங்கள் மற்றும் புதிய நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் முன்புறம் ரிடிசைன் செய்யப்பட்டு, புதிய டிசைன் கொண்ட பம்பர் மற்றும் இருபுறங்களிலும் முக்கோண வடிவம் கொண்ட இன்சர்ட்கள் உள்ளன. காரின் கிரில் பகுதியில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு, ஹூண்டாய் லோகோ கிரில் பகுதியில் இருந்து நீக்கப்பட்டு, பொனெட்டின் கீழ்புறம் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன. காரின் பக்கவாட்டு பகுதிகளில் 17 இன்ச் அளவில் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல்: லுமென் கிரே, மெட்டா புளூ பியல், லைம் மெட்டாலிக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ரூஃப் காண்டிராஸ்ட் நிற கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்த கார் டூயல் டோன் தோற்றத்தில் கிடைக்கிறது. புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும். ஆனால், எப்போது அறிமுகமாகும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.