;
Athirady Tamil News

வைரல் வீடியோவில் டேன்ஸ் ஆடுவது சித்தராமையாவா?!!

0

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றிருக்கும் சித்தராமையா நடனம் ஆடுவதில் விருப்பம் கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் சித்தராமையா மைசூருவில் உள்ள தனது கிராமத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் திருவிழாவில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, சித்தராமையா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 38 நொடிகள் ஓடும் வீடியோவில் நடனம் ஆடும் நபர் பார்க்க சித்தராமையா போன்றே காட்சியளிக்கிறார்.

பிரபல கன்னடா மொழி பாடலுக்கு நடனம் ஆடும் நபரை, அங்கு கூடியிருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினர். இதுபற்றிய இணைய தேடல்களில், வீடியோவில் நடனம் ஆடிய நபர் கர்நாடக முதல்வர் சித்தராமையா இல்லை என்று தெரியவந்துள்ளது. இதே வீடியோ கடந்த 2018 ஆண்டிலும் வைரல் ஆனதும் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.