;
Athirady Tamil News

அக்கவுண்ட் லாக் ஆனதாக வரும் எஸ்எம்எஸ்-ஐ நம்ப வேண்டாம் – வெளியான புது தகவல்!!!

0

பாரத ஸ்டேட் வங்கி பயனர்களின் அக்கவுண்ட் முடக்கப்பட்டு விட்டதாக கூறும் குறுந்தகவல் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்குரிய பரிமாற்றம் நடைபெற்றதால், வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதனை க்ளிக் செய்யும் போது திறக்கும் மற்றொரு வலைதளம் பயனர்களிடம் சில வழிமுறைகளை பின்பற்றி அக்கவுண்ட்-ஐ அன்லாக் செய்யக் கோருகிறது. இந்த தகவல் ஏராளமானோருக்கு பரவி வருவதை அடுத்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் (பி.ஐ.பி) எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளது. மேலும் அந்த தகவல் போலியான ஒன்று என தெரிவித்து இருக்கிறது. “எஸ்பிஐ சார்பில் அனுப்பப்பட்டதாக கூறும் குறுந்தகவல், பயனரின் அக்கவுண்ட் தற்காலிகமாக லாக் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுபோன்று வங்கி கணக்கு விவரங்களை கேட்கும் மின்னஞ்சல் / எஸ்எம்எஸ்-களுக்கு பதில் அனுப்ப வேண்டாம்.

இது போன்ற குறுந்தகவல்களை உடனடியாக [email protected] முகவரியில் தெரிவிக்க வேண்டும்,” என்று பிஐபி டுவிட்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது போன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும் போது உங்களின் தனிப்பட்ட விவரங்களை இயக்குவதற்கான வசதியை ஹேக்கர்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போகவும், தனிப்பட்ட விவரங்களை இழக்கவும் நேரிடும். இதுபோன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும் போது, ஹேக்கர் உங்களது அக்கவுண்டை இயக்குவதற்கான வசதியை பெற்றிடுவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.