வீதி விபத்துக்களில் சிக்கி 4 பேர் பலி!!

நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் பெண் ஒருவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொரலஸ்கமுவ, பூநகரி, தலத்துஓயா மற்றும் திருக்கோவில் ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு – ஹொரணை வீதியில் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வீதியைக் கடந்த 60 வயதுடைய பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மோதி உயிரிழந்துள்ளார்.
பூநகரி, செல்வபுரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் சென்றவரும் படுகாயமடைந்து பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னால் பயணித்தவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தலத்துஓயா, மைலப்பிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 60 வயதுடைய அதன் செலுத்துனர் உயிரிழந்துள்ளதுடன், திருக்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள கால்வாயில் கவிழ்ந்ததில் அதனை செலுத்திய 21 வயதுடைய இளைஞரும் உயிரிழந்துள்ளார்.