;
Athirady Tamil News

பாகிஸ்தானில் ஒரே நாளில் 30 பேர் பலி: “மழைக்கால அவசரநிலை” அறிவிப்பு!

0

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் “மழை அவசரநிலையை” அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது,

லாகூரிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள உப்பு நீர்த்தேக்கப் பகுதியான சக்வால் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். கடந்த 24 மணி நேரத்தில் 423 மிமீ. மழை அவசரநிலையை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சக்வாலில் திடீர் வெள்ளத்தால் சிக்கிய மக்களை வெளியேற்ற ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாகாணம் முழுவதும் வியாழக்கிழமையான இன்றும் பருவமழை தொடரும் என்பதால் பஞ்சாப் முழுவதும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்ததை அடுத்து, பாகிஸ்தான் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 26ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கியதிலிருந்து பஞ்சாபில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.

லாகூர், பைசலாபாத், ஒகாரா, சாஹிவால், பாக்பட்டான் மற்றும் சக்வால் ஆகிய இடங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் இறந்ததைத் தவிர, பஞ்சாப் முழுவதும் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும், பெரும்பாலான இறப்புகள் லாகூர், பைசலாபாத், ஒகாரா, சாஹிவால், பாக்பட்டான் மற்றும் சக்வால் ஆகிய இடங்களில் நிகழ்ந்துள்ளதாகவும் பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் 125க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. இதற்கிடையில், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ், ராவல்பிண்டி உள்பட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் “மழை அவசரநிலையை” அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மோசமடைந்து வரும் வெள்ள சூழ்நிலையிலிருந்து மக்களைப் பாதுகாக்க மாகாணம் முழுவதும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் மீட்பு துறை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய துறைகளும் சம்பவ இடத்திற்கு உள்ளதாகவும் பஞ்சாப் அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளன, மேலும் கள மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ வசதிகள் மக்களுக்கு உதவ முழுமையாகத் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.