;
Athirady Tamil News

கொசு கடித்தால் உயிரே போய்விடும் ; ஐரோப்பிய நாடுகளை அலறவிடும் வைரஸ்

0

ஐரோப்பிய நாடுகளை இப்போது வெஸ்ட் நைல் வைரஸ் அலறவிட்டுக் கொண்டு இருக்கிறது. இதுவரை 5க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது அங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், ஐரோப்பியச் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு இது பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

வெஸ்ட் நைல் வைரஸ்
இதுவரை ஐரோப்பாவில் 5 நாடுகளில் இந்த வெஸ்ட் நைல் வைரஸ் பரவியுள்ளது.

வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலெக்ஸ் வகை கொசுக்களின் கடி மூலம் மனிதர்களுக்குப் பரவும் ஒரு நோயாகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பறவைகளைக் கடிக்கும்போது, அந்த கொசுக்களில் இந்த வைரஸ் புகுந்துவிடுகிறது.

அவை பிறகு மனிதர்களைக் கடிக்கும்போது நமக்கு அந்த பாதிப்பு ஏற்படுகிறது.. மனிதர்களில் இந்த வைரஸ் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுள்ளவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை.

இருப்பினும், மிதமான அறிகுறிகளாகக் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடிப்புகள் போன்றவை ஏற்படலாம். மூளை வீக்கம் (என்செபலைட்டிஸ்), மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் ஏற்படும் வீக்கம் (மெனிஞ்சைட்டிஸ்) அல்லது கடுமையான தளர்வு வாதம் போன்ற தீவிர பாதிப்புகளும் கூட ஏற்படலாம்.

சிகிச்சை இல்லை இப்போது வரை வெஸ்ட் நைல் வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், நாம் அறிகுறிகளுக்குக் கட்டுப்படுத்த மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.