;
Athirady Tamil News

லொட்டரியில் வென்ற ரூ.61 கோடியை நண்பர்களுக்கு பிரித்து வழங்கும் இந்தியர்

0

லொட்டரியில் ரூ.61 கோடி பரிசு வென்ற இந்தியர், பரிசுத்தொகையை தனது 15 நண்பர்களுக்கு சமமாக பிரித்து வழங்குகிறார்.

லொட்டரியில் ரூ.61 கோடி வென்ற இந்தியர்

கேரளாவை சேர்ந்த 52 வயதான பிவி ராஜன், கடந்த 30 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் தரக் கட்டுப்பாட்டு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

நண்பர்களின் பரிந்துரையின் பேரில் லொட்டரி வாங்க தொடங்கியவர், கடந்த 15 ஆண்டுகளாக லொட்டரி வாங்கி வருகிறார்.

இந்நிலையில், இந்த மாதம் வெளியான அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் ரூ.61.37 கோடி (25 மில்லியன் திர்ஹாம்) பரிசு வென்றுள்ளார்.

கடந்த நவம்பர் 9 ஆம் திகதி, 282824 என்ற எண்ணில் அவர் வாங்கிய லொட்டரிக்கு பரிசு கிடைத்துள்ளது.

இது குறித்து பேசிய பிவி ராஜன், நான் வெளியில் இருந்ததால், பரிசு அறிவிக்கும் நேரலையை என்னால் பார்க்க முடியவில்லை. இந்த வெற்றி டிக்கெட் எனது குழுவால் வாங்கப்பட்டது. இந்த பரிசை உடன் பணிபுரியும் என் 15 நண்பர்களுக்கு சமமாகப் பிரித்து வழங்க உள்ளேன்.

எனது பங்கைக் கொண்டு, ஒரு தொண்டு நிறுவனத்தை ஆதரித்து தேவைப்படுபவர்களுக்கு உதவ உள்ளேன். மேலும் எனது குடும்பத்திற்காக ஒரு சிறிய பகுதியை ஒதுக்குவேன்.

தற்போது பரிசு கிடைத்தாலும் நான் நிச்சயமாக பிக் டிக்கெட்டிலிருந்து தொடர்ந்து வாங்குவேன். மற்றவர்களுக்கு எனது செய்தி என்னவென்றால், ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.

இன்று உங்கள் முறை இல்லையென்றால், நாளை அது இன்னும் சிறப்பானதாக இருக்கும். உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து கொண்டே இருங்கள், உங்கள் நேரம் எப்போது வரும் என்று உங்களுக்குத் தெரியாது.” என தெரிவித்துள்ளார்.

கடந்த முறை டிராவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த 44 வயதான பொறியாளரான சரவணன் வெங்கடாசலம் பரிசு வென்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.