;
Athirady Tamil News

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்

0

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் இன்று(13) விநியோகிக்கப்பட்டது.

யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் சனிக்கிழமை காலை , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , அதனை சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது

கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை , நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் , வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் , அவரது தந்தை தாய் , மற்றும் மருமகன் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

நிமலராஜன் படுகொலைக்கு கடந்த இருபத்தைந்து, ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக தொடர்ந்தும் யாழ் . ஊடக அமையம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.