;
Athirady Tamil News

ட்ரம்பை அலறவிட்ட சம்பவம் ; துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான நம்பமுடியாத பின்னணி

0

அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற பங்கேற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட 31 வயது கோல் டோமஸ் ஆலன் ஒரு உயர் கல்வி கற்ற பட்டதாரி மற்றும் மென்பொருள் உருவாக்குநர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனத் தரவுகளின்படி, ஆலன் ஒரு சாதாரணத் தாக்குதல்தாரியாகத் தெரியவில்லை.

சிறந்த ஆசிரியர்
கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இயந்திரவியல் பொறியியலில் இளநிலைப் பட்டமும், கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக கல்வி நிறுவனம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

2024-ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் “சிறந்த ஆசிரியர்” விருதையும் இவர் பெற்றுள்ளார். கணினி விளையாட்டுகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர், மூலக்கூறு வேதியியல் தொடர்பான ஒரு விளையாட்டை உருவாக்கியுள்ளார். விண்வெளியில் நடக்கும் போர் தொடர்பான புதிய விளையாட்டு ஒன்றை உருவாக்கி வந்ததாகவும் தெரிகிறது.

ஆலனின் முன்னாள் பேராசிரியர் பின் டாங் தெரிவிக்கையில், அவர் வகுப்பில் எப்போதும் முதல் வரிசையில் அமரும் மிகச் சிறந்த மாணவர். மிகவும் மென்மையாகப் பேசக்கூடிய, மரியாதையான பண்புள்ளவர். அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதிதேர்தலின் போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 25 டொலர்களை ஆலன் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வயோதிபர்களுக்கான சக்கர நாற்காலிகளில் புதிய வகை பிரேக் முறையைக் கண்டுபிடித்ததற்காக ஒரு காலத்தில் பாராட்டப்பட்ட ஒரு இளம் விஞ்ஞானி, தற்போது பல நவீன ஆயுதங்களுடன் அமெரிக்க ஜனாதிபதியை தாக்க முயன்றது ஏன் என்பது குறித்துப் புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, கணினி விளையாட்டுப் போர்களை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்த முயன்றாரா அல்லது ஏதேனும் அரசியல் விரோதம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.