;
Athirady Tamil News

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த கிம் குடும்பம்!

0

கடந்த 2023 மே 6 அன்று, கிம் குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் ஒரு சிறிய மீன்பிடி படகில் ஏறி, மஞ்சள் கடலின் அபாயகரமான அலைகளை கடந்து தென்கொரியாவிற்குள் நுழைந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த பயணத்திற்கான விதை 10 ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் தந்தையினால் போடப்பட்டது. தந்தை மறைந்தாலும், அவரது மகன்களான கிம் இல்-ஹியோக் மற்றும் கிம் யி-ஹியோக் ஆகியோர் அந்தத் திட்டத்தை மிக நுணுக்கமாக செயல்படுத்தினர்.

கிம் குடும்பத்தின் வரலாற்றில் அழியாத வடு
கடலோர பகுதிக்கு குடிபெயர்ந்து, மீன்பிடிக்க கற்றுக்கொண்டு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து செல்வாக்கை வளர்த்துக்கொண்ட தம்பி யி-ஹியோக், எல்லை பாதுகாப்பின் ஓட்டைகளை துல்லியமாக கணக்கிட்டார்.

தப்பிக்கும் அன்று கர்ப்பிணி பெண் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட அனைவரும் கண்ணிவெடி வைக்கப்பட்ட பாதையை தாண்டி படகிற்கு வந்தனர். ரேடாரில் சிக்காமல் இருக்க மெதுவாக நகர்ந்த அந்த படகு, இறுதியில் தென்கொரிய கடற்படையால் மீட்கப்பட்டது.

சுதந்திர காற்றை சுவாசித்த சில மாதங்களில் இல்-ஹியோக்கின் மனைவிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பல ஆண்டுகால உழைப்பால் குடும்பத்தை மீட்ட தம்பி யி-ஹியோக், தென்கொரியாவில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

வெறும் 19 மாதங்கள் மட்டுமே சுதந்திரத்தை அனுபவித்த அந்த இளைஞனின் தியாகம் கிம் குடும்பத்தின் வரலாற்றில் அழியாத வடுவாக மாறியுள்ளது.

தற்போது இல்-ஹியோக் தென்கொரியாவில் ஒரு சமையல் கலைஞராக பயிற்சி பெற்று வருவதோடு, வடகொரியாவின் இருண்ட பக்கங்களைப் பற்றி உலகிற்கு தொடர்ந்து பேசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.