;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தை புரட்டிப்போட்ட புயல் ; நீரில் மூழ்கிய நல்லூர், பறிபோன உயிர்

0

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் புகையிர நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது. குருநகர் பகுதி வாழ் மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மருதங்கேணியில் ஒருவர் உயிரிழந்தார்.

சீரற்ற காலநிலை

நேற்று இரவின் நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததுடன் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்தது. ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தென்மராட்சி பிரதேசத்தின் கொடிகாமம், வரணி,மிருசுவில் மற்றும் நாவற்குழி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் 128 குடும்பங்களை சேர்ந்த 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்படவர்களில் 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேர் யா/ பேக்கட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.