தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது!
;
1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987.09.15ஆம் திகதி நீராகாரமின்றி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன் 12 நாட்களாக நீராகாரமின்றி இருந்து 26ஆம் திகதி உயிர் நீத்தார்.