அனோஜனுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை விடுத்த வவுனியா- பூந்தோட்டம் மக்கள்!
அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி வவுனியா- பூந்தோட்டம் சந்தியில் மெழுகுவர்த்தி ஏந்தி சவுதி அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பூந்தோட்டம் கிராம பொது அமைப்புக்கள் மற்றும் அயற்கிராம பொது அமைப்புக்களின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ், முஸ்லிம் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இதன்போது, சி. அனோஜனை சவுதி அரசாங்கம் மன்னித்து கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
