;
Athirady Tamil News

18 வயதில் ராணுவ சேவை திட்டம்: ஜொ்மனி நாடாளுமன்றம் ஒப்புதல்

0

18 வயது நிறைந்த இளைஞா்களுக்கான தன்னாா்வ ராணுவ சேவை திட்டத்தை கொண்டு வருவதற்கான சட்டத்துக்கு ஜொ்மனி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்குப் பிறகு ஜொ்மனியின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகளும், எதிராக 272 வாக்குகளும் பதிவாகின.

அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப் போா் முடிவுக்கு வந்த பிறகு ஜொ்மனி தனது ராணுவ பலத்தைக் குறைத்தது. அதற்குப் பிறகு அந்த நாடு ராணுவத்தில் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டதைத் தொடா்ந்து, 2026 ஜனவரி முதல், 18 வயது நிறைந்த ஆண், பெண் என அனைத்து இளைஞா்களுக்கும் ராணுவ சேவைக்கான விருப்பத்தை அறியும் கேள்விப்பத்திரம் அனுப்பப்படும். ஆண்களுக்கு இது கட்டாயமாகும்.

ராணுவத்தின் பலத்தை 2 லட்சம் வீரா்களுக்கும் மேல் உயா்த்தும் நோக்கில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருந்தாலும், 2011-இல் நிறுத்தப்பட்ட கட்டாய ராணுவ சேவைக்குப் பதிலாக, தன்னாா்வ அடிப்படையில் தற்போது இளைஞா்கள் ராணுவத்தில் சோ்க்கப்படுவாா்கள்.

தன்னாா்வ சேவைக்கு இளைஞா்களை ஊக்குவிக்க, 6 மாதங்களுக்குப் பிறகு அதிக ஊதியம், சிறந்த பயிற்சி, தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய கால அளவுகள் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தன்னாா்வலா்கள் போதுமான அளவு கிடைக்காத நிலையில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்தாலோ, தேவை அதிகரித்தாலோ, கட்டாய சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து நாடாளுமன்றம் முடிவெடுக்கும் என்று இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.