;
Athirady Tamil News

AIDS எண்ணிக்கையில் இந்தியா 2வது இடம் – தமிழ்நாட்டுக்கு என்ன நிலை?

0

AIDS நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தையொட்டி, இந்தியாவில் எத்தனை ஹெச்.ஐ.வி நோயாளிகள் உள்ளனர் என்பது குறித்த தரவுகள் வெளியாகின.

2024-ம் ஆண்டை மையப்படுத்தி இந்த புள்ளிவிவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வருடமும் வரும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை சராசரியாக 48.7 சதவிகிதம் குறைந்துள்ளது. இறப்பு விகிதம் 2010-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2024-ல் 81.4% குறைந்துள்ளது.

குறிப்பாக தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் ஹெச்.ஐ.வி பாதிப்பு குறைந்துள்ளது. 73% பேருக்கு வேற்று பாலினத்தவர் உடனான பாலியல் உறவு மூலமாகவும், 11.5% பேருக்கு போதை ஊசி மூலமாகவும், 5.4% பேருக்கு தன்பாலினத்தவர் உடனான பாலியல் உறவு மூலமாகவும்,

தமிழ்நாடு என்ன இடம்?
3.5% பேருக்கு கர்ப்ப காலத்தின்போதோ பிரசவத்தின்போதோ தாய்ப்பால் மூலமாகவோ பரவியுள்ளது. ஹெச்.ஐ.வி நோயாளிகள் 25.61 லட்சம் பேரில் 13.97 லட்சம் பேர் ஆண்கள், 11.64 லட்சம் பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், மகாராஷ்ட்ரா (3.99 லட்சம்) முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, ஆந்திரா (3.10 லட்சம் நோயாளிகள்), கர்நாடகா (2.91 லட்சம் நோயாளிகள்) உள்ளனர். உ.பி, தமிழ்நாடு, தெலங்கானா, பீகார், குஜராத், பஞ்சாப் போன்றவை அடுத்தடுத்து உள்ளன.

தமிழ்நாடு இப்பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது. உலகளவில் இந்தியாவுக்கு முன்னதாக உள்ள நாடு, தென்னாப்பிரிக்கா. அங்கு மொத்தம் 78 லட்ச நோயாளிகள் வாழ்கின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 25.61 லட்சம் என்று உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.