தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று காலை 06.30 மணி நிலவரப்படி, இலங்கை முழுவதும் உள்ள மற்ற ஆறுகளின் நீர்மட்டம் சாதாரண மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு களுத்துறை மாவட்டத்தின் பானதுகம பகுதியில் பதிவாகியுள்ளது, இது 120.8மிமீமழை வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.
இதனால் தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.