கிரிக்கெட் விளையாடும் விரிப்புகள் தீக்கிரை -விசாரணை ஆரம்பம்
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தின் களஞ்சிய அறையினுள் வைக்கப்பட்டிருந்த மற்றின்கள் கடந்த திங்கட்கிழமை(5) தீக்கிரையாக்கப்பட்டிருந்தன.
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இக்கிரிக்கெட் விளையாடும் விரிப்புகள் -மற்றின்கள் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.
இச் சம்பவம் தொடர்பில் காரைதீவு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைதீவு விளையாட்டுக்கழகம், விவேகானந்தா விளையாட்டுக்கழகம் ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான கடின பந்து கிரிக்கெட் விளையாடும் விரிப்புக்களே (Matin) இவையாகும்.
இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபர் உட்பட இம் மூன்று கழகத்தின் தலைவர்களும் இணைந்து காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனடிப்படையில் காரைதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்து பார்வையிட்டதுடன் இச்சம்பவம் மேலதிக நடவடிக்கைகளை தொடர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.இதில் சுமார் 5 இலட்சத்துக்கு மேலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.