கிளிநொச்சியின் இளம் குடும்ப பெண் யாழில் நேர்ந்த துயரம்
மூச்செடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் சுவாசிக்க சிரமப்பட்டதன் காரணத்தினால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.