200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும்: மு.க ஸ்டாலின் சூளுரை
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில், பொங்கல் வைத்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பசுக்களுக்கு உணவளித்ததுடன், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி அனைவருக்கும் வாழ்த்தும் தெரிவித்தார்.
200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அரசு தங்களுடைய நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கொளத்தூரில் நிகழ்ச்சி நடக்கிறதென்றால் அதில் ஒரு வேகமும், சக்தியும் வந்து விடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் களத்தில் திமுகவினர் போல் யாராலும் வேலை பார்க்க முடியாது என்று பாஜகவினரே கூறுவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.