உக்ரைன் மீது புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போராட்டத்தை முடிக்க முயற்சிகள் நடைபெற்று வந்தபோது, ரஷ்யா புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் 20 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து, 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை உடனடியாக நடந்த தாக்குதலில், கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
கத்தார், ரஷ்யா-உக்ரைன் சிறைக்கைதிகள் பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.