சண்டிலிப்பாயில் முச்சக்கர வண்டி மோதி – வயோதிபப் பெண் பலி
;
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் வீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். இதன்போது வீதியில் வேகமாக வந்த முச்சக்கர வண்டி அவர்மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், சிகிச்சைக்காக சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை இடையிலேயே அவர் உயிரிழந்தார். அவரது சடலம் தற்போது சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.