தவறான முடிவினால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு
யாழில் தனது உயிரை மாயத்துக்கொள்ளும் நோக்குடன் இன்றைய தினம் புதன்கிழமை தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவ சிப்பாய் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியில் அமைந்துள்ள 523 ஆவது படைப்பிரிவின் இராணுவ முகாமில் கடமையாற்றும், குருநாகல் பகுதியை சேர்ந்த
எச்.எம்.டபிள்யூ.பீ. பண்டார எனும் இராணுவ சிப்பாயே காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.