;
Athirady Tamil News

மரணம் வரவில்லை; யாழில் முதியவரின் விபரீத முடிவால் அதிர்ச்சி

0

யாழ்ப்பாணம் நல்லூர் – ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 96 வயதான முதியவர் ஒருவர் தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் நேற்று (01) தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த முதியவர் எந்தவிதமான நோய்களும் இன்றி ஆரோக்கியமாக இருந்துள்ளார். தனக்கு இவ்வளவு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற மனவிரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவரை காணவில்லை என தேடியபோது அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.