;
Athirady Tamil News

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ‘ஊராட்சி முற்றம்’ கலந்துரையாடல்

0

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், ஊராட்சி முற்றக்கூட்டம், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன்
இன்றைய தினம் (05.02.2026) பி. ப. 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர்  எஸ். லதுமீரா ஆகியோரது இணைத் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் தொடக்கவுரையாற்றிய அரசாங்க அதிபர், கிராம மட்டத்தில் அடையாளம் காணப்படும் தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இக் கலந்துரையாடல்கள் அமைவதாகவும், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற'”ஊராட்சி முற்றம்” கூட்டத்தில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யில் இடவசதி போதாமையால் குறித்த கட்டடத்தினை விரிவாக்கம் தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அமைய, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடம் விரிவாக்கப்பட்டதை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு, இக் கலந்துரையாடல் ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, மேலதிக அரசாங்க அதிபர் கே சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர்  உ.தா்சினி மற்றும் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர்  ம. தமிழ்செல்வி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கூட்டம் நடைபெற்றது.

மேலும், மக்கள் எதிர்நோக்கும் பல்துறைசாா் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஊராட்சி முற்றத்தில் கலந்துரையாடி தீர்வு வழங்குவதை நோக்காக கொண்டு இக்கூட்டம் நாடாத்தப்பட்டது.

இதில் ஊராட்சி முற்ற கூட்டத்தின் நோக்கம்,
மாவட்ட அளவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளாக அடையாளம் காணப்பட்ட சிறுவர், பெண்கள் நலன் மற்றும் குழுக்கள், பாதுகாப்பு, கல்வி, விவசாயம், பெண்கள் சிறு சிறு கைத்தொழில் உற்பத்தி உள்ளிட்ட பல காத்திரமான விடயத் தலைப்புகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுடன், மாவட்ட ரீதியில் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பரிந்துரைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், தொடர்புடைய அரச அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட குடிசார் அமைப்புகளின் சம்மேளன உறுப்பினர்கள், மற்றும் கிறிசலிஸ் நிறுவன சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.