;
Athirady Tamil News

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், பாடசாலை சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில்  செவ்வாய்க்கிழமை(30)  நிந்தவூர் அல் மதீனா (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஜாபிர் வழிகாட்டலில் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் பொறுப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு, தொடர்புடைய சட்டங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள், தற்போதைய சந்தையில் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விலைகள் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதான வளவாளர்களாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களான  முஹம்மட் ஸாஜீத் ஸமான் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விரிவான விளக்கங்களை வழங்கினர்.

மேலும், உயர் தரப் பிரிவு ஆசிரியர்களும் நிகழ்வில் பங்கேற்று மாணவர்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.