;
Athirady Tamil News

டெல்லியில் தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்து கொன்ற 3 உணவு டெலிவரி ஊழியர்கள்

0

டெல்லியில் தொழிலதிபர் ஒருவரை டெலிவரி ஊழியர்கள் தலைகவசத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபரை அடித்து கொன்ற டெலிவரி ஊழியர்கள்
டெல்லியின் மிகவும் நெரிசலான Connaught Place பகுதியில் கடந்த ஜனவரி 3ம் திகதி நடந்த கொடூர சம்பவம் மிகவும் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது, டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியை சேர்ந்த 36 வயது தொழிலதிபர் சிவம் குப்தாவுக்கும், மூன்று உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த டெலிவரி இளைஞர்கள் 3 பேரும் கையில் இருந்த தலைகவசத்தால்(Helmet) சிவம் குப்தாவை சரமாரியாக தாக்கி படுகாயமடைய வைத்துள்ளனர்.

இறுதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சிவம் குப்தாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கிட்டத்தட்ட 16 நாட்கள் உயிருக்குப் போராடிய சிவம் குப்தா இறுதியில் ஜனவரி 19ம் திகதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2 இளைஞர்கள் கைது
இந்த சம்பவத்தை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் 2 இளைஞர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள மூன்றாவது இளைஞரை தீவிரமாக டெல்லி பொலிஸார் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.