மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு காகிதாதிகள் அன்பளிப்பு
கல்முனை பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக காகிதாதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதன் போது கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எந்திரி பொறியியலாளர் நடராஜா கதீஷன் உட்பட செயலாளர் லயன் சட்டத்தரணி அருள்.நிதான்சன் மற்றும் பாடசாலையின் முதல்வர் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் பாடசாலை வளாகத்தில் ஞாபகார்த்த மரம் ஒன்றும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
