;
Athirady Tamil News

அமெரிக்காவின் ‘மிகவும் ஆபத்தான குற்றவாளிகள்’ பட்டியலில் 89 இந்தியர்கள்

0

ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு குடியேற்றக் கொள்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய “மிகவும் ஆபத்தான குற்றவாளிகள்” பட்டியலை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் மொத்தம் 89 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அல்லது தண்டனை பெற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Operation Safe Cities என்ற திட்டத்தின் கீழ், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் பணியைத் டிரம்ப் நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் விவாதத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.