;
Athirady Tamil News

முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பி துண்டு ; வடையில் வெட்டுக்கிளி; வாடிக்கையாளர் அதிர்ச்சி!

0

மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றையதினம் (29) குறித்த உணவகத்தில் வாங்கப்பட்ட வடையை சாப்பிட முற்பட்ட வேளையில் வடையுடன் வெட்டுக்கிளி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பி துண்டு
இதனை அடுத்து, மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இவ்விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களின் உணவுத் தரம் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பாக உரிய முறையில் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்களின் சுகாதாரத்தை கருத்திற்கொண்டு, உணவகங்களில் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்ற படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

இதேவேளை, நேற்று முன்தினம் மன்னார் நகர் பகுதியில் வாங்கப்பட்ட முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பி துண்டு காணப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று (29) செவ்வாய்க்கிழமை மற்றொரு உணவுப் பொருளில் வெட்டுக்கிளி காணப்பட்டுள்ளமை உணவு பாதுகாப்பு குறித்த கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.