;
Athirady Tamil News

யாழ். போதனா வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. 
வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பேரருட்திரு கலாநிதி அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை திருவிழா திருப்பலியை நிறைவேற்றி ஆசீர்வாதம் வழங்கினார்.
தொடர்ந்து, நோயாளிகள் விரைவில் நலம் பெறவும், அவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் தமது சேவையை சிறப்பாக முன்னெடுக்கவும் விசேட இறைவேண்டல்கள் மேற்கொள்ளப்பட்டன.
You might also like

Leave A Reply

Your email address will not be published.