;
Athirady Tamil News

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

0

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

3 பேர் பலி

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்ற நபர் குறித்தும், துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.