;
Athirady Tamil News

அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்திய வரைபடம் ; பாகிஸ்தானுக்கு பேரிடி

0

அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பு இன்று அதிகாரப்பூர்வ விளக்கப்படத்தில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா காட்டியுள்ளது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட இந்த வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தமட்டில் அமெரிக்காவின் முதன்மையான மற்றும் மாற்ற முடியாத உலகளாவிய கூட்டாளி என்பதை அமெரிக்க அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இதேபோல், சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அக்சய் சின் பகுதியும் இந்திய நிலப்பரப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள இந்திய வரைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.