;
Athirady Tamil News

ஒரே நாளில் திருமணம் ஒரே நாளில் பிரசவம் இரட்டை சகோதரிகளுக்கு நடந்த அரிய நிகழ்வு

0

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் திருவஞ்சூரை சேர்ந்த அணில் குமார் மற்றும் சூர்யா தம்பதியினருக்கு ஆதிரா ஆர்யா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தார்கள். அந்த சகோதரிகளுக்கு இப்பொழுது 25 வயது ஆகிறது.

இருவரும் படிப்பில் ஒரே துறையை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். தற்பொழுது இருவரும் செவிலியராக பணியாற்றி வருகிறார்கள். பிறகு ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இருவருக்கும் திருமண வாழ்க்கையும் ஒரே மாதிரியாகவே அமைந்துவிட்டது. அதாவது கடந்த 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி இரட்டை சகோதரிகளுக்கு திருமணம் நடந்தது.

கருவற்றா பகுதியை சேர்ந்த அகிலேஷ் குமாரை ஆதிராவும் மாவேலிக்கரையை சேர்ந்த சேரன்மோகனை ஆரியாவும் மணமுடித்தனர்.

பிறகு இருவரும் வெளிநாடு சென்றனர். இதற்கு இடையே தற்பொழுது இரட்டை சகோதரிகள் கடந்த ஒன்பதாம் தேதி ஒரே நாளில் ஒரு சில மணி கால இடைவேளையில் அழகான பெண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள்.

குழந்தைகளுக்காக பெயர் சூட்டு விழாவிற்கு கடந்த 20 ஆம் தேதி இருவரும் தங்களுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான கோட்டயம் திருவஞ்சூருக்கு வந்தனர்.

இவ்வாறு இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் குழந்தை பிறந்திருப்பது அரிய நிகழ்வாகவும் பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு நடந்த ஒரு சம்பவமாகவும் பலரும் பார்த்து வியந்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.