;
Athirady Tamil News

கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி தன்யா நாதன்

0

கேரளாவின் கன்னூரை சேர்ந்த 24 வயது தன்யா நாதன் கேரளாவில் நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முதல் இடம் பெற்றுள்ளார்.

ஒளி உணர்தல் குறைப்பாட்டுடன் பிறந்த தன்யா, பிரெய்லி மற்றும் ஸ்கிரீன் ரீடிங் மென்பொருள் உதவியுடன் படித்து கன்னூர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி முடித்தார்.

பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் ஜூனியர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் வெளியான கேரளா நீதித்துறை சேவைத் தேர்வு முடிவில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

2025ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பார்வை மாற்றுத்திறனாளிகளும் நீதித்துறை தேர்வில் பங்கேற்கலாம் என்று முக்கிய உத்தரவு வழங்கியது.

அதன்பேரில் தற்போது தன்யாவுக்கு நீதிபதியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கேரளா வரலாற்றில் முதல் முறையாக பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் நீதிபதியாக தேர்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.