;
Athirady Tamil News

டித்வா புயலினால் மண்சரிவுக்குள்ளான பகுதியில் மீண்டும் ஆபத்து

0

டித்வா’ புயலினால் ஏற்கனவே மண்சரிவுக்குள்ளான அரநாயக்க பகுதியில் நேற்று மழை பெய்ததால் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, அரநாயக்கவின் அம்பலகந்த, தோதல்தோய மற்றும் கந்துன ஆகிய பகுதிகளுக்கு இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

அரநாயக்க நகரில் இருந்து தோதல்தோய வரை செல்லும் பிரதான வீதி நடுவே மிகவும் அபாயகரமான முறையில் வெடித்துத் தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தோதல்தோய கிராமத்திற்கு வாகனங்களில் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மாற்று வீதியான புவக்வத்த வீதியும் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.