;
Athirady Tamil News

யாழில். வருமான வழியைக் காட்டத் திணறும் திடீர் பணக்காரர்கள்

0
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்த குற்றச்சாட்டில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் பொலிஸ் விசாரணை வலயத்தினுள் சிக்கியுள்ளனர். 
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலர் திடீர் பணக்காரர்களாக மாறி , அதிசொகுசு வீடுகள்  , அதிசொகுசு வாகனங்கள் , அதிகளவான நகைகள் அணிந்து என ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வாறான சொத்துக்கள் அவர்களுக்கு எவ்வாறாக கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் , யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் , மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் , விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன் போது, போதைப்பொருள் கடத்தல்கள் , சட்டவிரோதமான முறையில் மீட்டர் வட்டிக்கு பணம் வழங்குதல் , கப்பம் கோரல் உள்ளிட்ட சட்டவிரோதமான முறையில் சம்பாதித்தமை தொடர்பில் தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன
அதன் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 18 பேரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி , வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் , வாக்கு மூலம் பெற்றவர்களில் பலர் தமது வருமான வழி தொடர்பில் திருப்திகரமான பதில் வழங்காத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்
அதேவேளை , குறித்த 18 பேர் தவிர்ந்த மேலும் சிலரிடமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் , அவர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.