;
Athirady Tamil News

பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

0
video link-
பெரியநீலாவணை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகளைப் பலப்படுத்தும் நோக்கில், புதிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு  அண்மையில்  பெரியநீலாவணை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் பாத்திமா ஸப்னா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு கடிதங்களை வழங்கி வைத்தனர்.

இந்தக் குழுவின் மூலம் வைத்தியசாலையின் நீண்டகாலத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கான சிறந்த மருத்துவ சேவைகள் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் (PMCU) சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவொன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு   சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி  வைத்தியர் எஸ். பிரிமியா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு, உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.