;
Athirady Tamil News

தமிழகத்தில் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்ட யாழ் நபர் ; இலங்கைக்கு அனுப்பப்படும் சடலம்

0

நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் இன்று (19) நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேடுதல் நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மீனவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

இந்த மீனவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இன்றையதினம் அவரது சடலமாக தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

உரிய விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.