;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு எதிராக போராட்டம்!

0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் சீரான சேவைகள் இல்லாத காரணத்தால் அவற்றை சீர் செய்யுமாறு கோரி நாளை (21) காலை 8.00 மணிக்கு வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு தாதியர் இன்மை, 24 மணிநேர சேவையின்மை, நோயாளர் காவு வண்டியை காரைநகர் வைத்தியசாலைக்கு வழங்கியமை, வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகள் போன்றவற்றுக்கு தீர்வு கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டமானது நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த போராட்டத்தில்,வட்டுக்கோட்டை வைத்தியசாலையை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரையும் இணையுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.