;
Athirady Tamil News

அமெரிக்க உளவு அமைப்பு தலைவரின் மின்னஞ்சலை முடக்கிய ஈரான்

0

அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ தலைவர் காஷ் பட்டேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஈரானின் ஹண்டாலா ஹேக் டீம் என்ற குழுவால் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்னஞ்சலை ஹேக் அதிலிருந்த 300 இற்கும் அதிகமான மின்னஞ்சல்கள் மற்றும் அவரது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த மின்னஞ்சல்களில் 2010 முதல் 2019 வரை உள்ள தனிப்பட்ட மற்றும் பணி சார்ந்த தகவல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

. ‘ஹண்டாலா ஹேக் டீம்’ எனும் இந்த அமைப்பின் ஊடுருவலை எஃப்பிஐ உறுதிப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் பழையவை; அரசு ரகசியங்கள் எதுவும் கசியவில்லை என்று விளக்கமளித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.