;
Athirady Tamil News

கொழும்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம் ; பெற்றோர் அதிர்ச்சி!

0

கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே கீழே விழுந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.