;
Athirady Tamil News

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு

0

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையில் (DVTC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை(21) சமூக மட்டத்தில் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையில் அங்கு பயிற்சி நெறியினை மேற்கொள்ளும் பயிலுனர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறுப்பதிகாரி எஸ்.அப்துல் நாஸர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பாவனையாளர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் முறைப்பாடு செய்வது சம்மந்தமாக பயிலுனர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவ் விழிப்புணர்வு நிகழ்சிக்கு பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட்.எம் ஸாஜீத் மற்றும்,ஏ.பீ.எம் றிப்சாத் ஆகியோருடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.