;
Athirady Tamil News

நெடுந்தீவில் நாளை போராட்டம் – போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் சங்கங்கள் சேவை நிறுத்தம்

0

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் நாளைய தினம் வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரைக்கும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெடுந்தீவு தனியார் படகு உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம், மற்றும் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கம் என்பன போராட்ட தினத்தில் தங்கள் சேவையினை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை (24/04) நெடுந்தீவுக்கான தனியார் கடற்போக்குவரத்து மற்றும் உள்ளூர் தனியார் போக்குவரது சேவைகள் இடம்பெறாது என போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.