யாழில் இளம் பொறியியலாளரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்
யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.