;
Athirady Tamil News

கோட்டையம்பதி சிவசுப்பிரமணியர் சுவாமி ஆலய இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம்

0

வண்ணை – கோட்டையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானம் அதிசுந்தர நூதன பஞ்சதள இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம். மூலஸ்தான அபிஷேகம். யாகஹோமம் பூஜைகள், தீபாராதனை, இராக தாள வேத ஷோத்திர திருமுறைகள் பாராயணம். மஹா ஆசீர்வாதம் இடம்பெற்று. 7.30 மணி தொடக்கம் 9.00 மணிவரையுள்ள சுப முகூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முருகப்பெருமானுக்கு பிரதான வாசலில் அழகிய சிற்பங்களைக் கொண்டதுமான அதி உன்னத அதிசுந்தர பஞ்சதவ மஹா இராஜகோபுரமும் அதனுடன் கலைநயம்மிக்க மணி மண்டபமும் அமையப் பெற்றுள்ளமை ஆலயம் மேலும் சிறப்புக்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.