;
Athirady Tamil News

வாய்த்தர்க்கத்தால் குழுக்களுக்கிடையே வெடித்த மோதல் ; கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன்

0

அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் இன்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது.

தீவிர விசாரணை
இந்த மோதல் முற்றிய நிலையில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய சூரியவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.