குறிவைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: பசிபிக் கடலில் அமெரிக்க படை நடத்திய தாக்குதல்
போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ராணுவம் தாக்குதல்
பசிபிக் பெருங்கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த தாக்குதலில் படகில் இருந்த 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் பொதுவாக நடத்தும் தாக்குதல்கள் தீவிரமாக இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தில் ஒருவர் உயிர் பிழைத்து இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மெக்சிகோ கடற்படை முன்னின்று நடத்தி வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடல்வழி போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்க படைகளால் கிட்டத்தட்ட 190 க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.