;
Athirady Tamil News

இந்திராவிழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு பிடியாணை

0
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திர விழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 06 உணவு விற்பனையாளர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
வல்வெட்டித்துறையில் கடந்த 1ஆம் திகதி இந்திர விழா மிக சிறப்பாக நடைபெற்றது.விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். 
 
அதன் போது , சுகாதார சீர்கேடுகளுடன் உணவுகளை கையாண்டு விற்பனை செய்த ஐஸ்கிறீம் வாகனங்கள், காரம் சுண்டல் மற்றும் பானிப்பூரி விற்பனை நிலையங்கள் உள்ளடங்கலான 12 உணவு விற்பனையாளர்களுக்கு எதிராக சுகாதார பரிசோதகரினால் , சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
குறித்த 12 பேருக்கும் எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 
அதன் போது 06 பேர் மன்றில் முன்னிலையாகி தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்த்து அவர்கள் 06 பேருக்கும் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. 
 
மன்றில் முன்னிலையாகாத 06 பேருக்கும் எதிராக மன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.