;
Athirady Tamil News

கொமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற யாழ். மாணவனுக்கு கௌரவம்

0
கொமன் வெல்த் பளு தூக்குதல் போட்டியில்  யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த யாழ் இந்துக்கல்லூரி  மாணவனாகிய பரமலிங்கம் தாரகன் வெண்கலப் பதக்கத்தை பெற்றதை அடுத்து மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவரது சொந்த ஊரான உரும்பிராயில் இடம் பெற்றது.
பளுதூக்கல் கனிஷ்ட பிரிவில் 110+kg எடைப்பிரிவில் 98Kg Snatch மற்றும் 132kg Clean and Jerk மொத்தமாக 230Kg எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் பெற்றார்.

மாணவனை கௌரவிக்கும் முகமாக , உரும்பிராய் சந்தியில் இருந்து ஊர்வலமாக சென் மைக்கல் சனசமூக நிலையத்திற்கு அழைத்து சென்று , சனசமூக நிலையம் முன்பாக கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.